கன்னட நடிகர் புனித ராஜ் குமார் மறைவிற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கல்

சென்னை 29 அக்டோபர் 2021  கன்னட நடிகர் புனித ராஜ் குமார் மறைவிற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கல்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் என். ராமசாமி அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்

“கன்னட திரையுலகில் பல வெற்றிபடங்களில் நடித்து தனி ஆளுமையோடு பவனி வந்த திரு.புனித்ராஜ்குமார் அவர்கள், இன்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு ஒட்டுமொத்த திரையுலகமே பேரதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

கர்நாடகத்தில் தனக்கென்று தனி முத்திரை பதித்து தந்தை வழியில் சமூகசேவை ஆற்றி வந்த திரு.புனித் ராஜ்குமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிக பெருமக்களுக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மட்டுமல்ல,ஒட்டுமொத்த தமிழ் திரையுலகின் சார்பில் ஆழந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்த்து கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.