தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14க்குள் நல்ல செய்தி வரும்! மாஸ்டர் டிரைலர் குறித்து நடிகர் மாஸ்டர் மகேந்திரன் டிவிட் !

நடிகை தளபதி விஜய் நடித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த கொரோனாவால் ரிலீஸ் செய்யப்படாமல் இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலர் எப்போது என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் தளபதி விஜய் “மாஸ்டர்’ படத்தில் நடித்து வருகிறார். கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மாணவராக சாந்தனு பாக்யராஜும் , வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவைக் கலக்கிய மாஸ்டர் மகேந்திரனும் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதையடுத்து இப்படத்தின் எப்போது ரிலீஸாகும் என ரசிக்ர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர். அதையொட்டி ரசிகர்களில் ஒருவர் மகேந்திரனின் சமூகவலைதளப் பக்கத்தில் படத்தின் டிரைலர் எப்போது ரிலிஸாகும் எனக் கேள்வி எழுப்ப, அதற்குப் பதிலளித்த மகேந்திரன் ’செல்லக்குட்டி… நானும் உன்ன மாரி வெயிட்டிங்தான். டீசர் அல்லது டிரெய்லர் ரிலிஸ் பண்ணா நல்லா இருக்கும். கவலைப்படாதீங்க, ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் ஒரு நல்ல அப்டேட் வெளிவரும்’ எனக் கூற சமூகவலைதளங்களில் அதற்குள் ஏப்ரல் 14 ஆம் தேதி டிரைலர் ரிலிஸ் என செய்திகள் பரவ ஆரம்பித்தன.

இதனால் பதறிப்போன மகேந்திரன் மீண்டும் ஒரு டிவிட் மூலம் ‘எப்பா ராசா, ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டுல்ல, அந்த ஒரு கணக்குல நானா சொன்னேன், ஒரு ரசிகனா உங்களை மாதிரி நானும் வெயிட் பண்ணிட்டுதான் இருக்கேன். மத்தபடி எனக்கு ஒண்ணுமே தெரியாது’ எனக் கையை விரித்துள்ளார்.

https://twitter.com/Actor_Mahendran/status/1247172773153091584?s=19

https://twitter.com/Actor_Mahendran/status/1247185706306265093?s=19