மாஸ்-க்கு மாஸ்டர்; மாஸ்டருக்கு..! தளபதியுடன் இணையும் ரா.பார்த்திபன்

மாஸ்-க்கு மாஸ்டர்; மாஸ்டருக்கு..! தளபதியுடன் இணையும் ரா.பார்த்திபன்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடித்து வரும் படம் மாஸ்டர்.

இப்படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை ஏப்ரல் மாதம் 9-ம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

இதன்பின்னர் தளபதி விஜய்யின் அடுத்த படத்தை (தளபதி 65) யார்? இயக்குவார்? என்ற கேள்வி கோலிவுட்டில் எழுந்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் சுதா கொங்கரா இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த நிலையில் ’‘தளபதி 65’ படத்தில் இயக்குநர் பார்த்திபன் விஜய்யுடன் இணைந்தால் செம மாஸ்’ என்று ட்விட்டரில் ரசிகர் ஒருவர் பதிவிட்டு இருந்தார்.

அதற்கு பதிலளித்த பார்த்திபன், “மாஸ்க்கு மாஸ்டரை பிடிக்கும். மாஸ்டருக்கு இந்த நண்பனைப் பிடிக்கும். (‘நண்பன்’ படத்தை என்னையே முதலில் இயக்கச் சொன்னார். அழகியத் தமிழ் மகனுக்கு எழுதச் சொன்னார்). நாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும்” என பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!