தளபதி 64′ திரைப்படம் குறித்த புதிய அப்டேட்

”பிகில்’ திரைப்படத்தை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்க இருக்கிறார். அனிருத் இசையமைக்க இருக்கும் இப்படத்திற்கு எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்தப் படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் மாலை 5 மணிக்கு புதிய அப்டேட் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.