துருவ் விக்ரம் நடிக்கும் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் புதிய தகவல்

தெலுங்கில் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை விக்ரம் மகன் துருவ்வை நாயகனாக அறிமுகப்படுத்தி ‘வர்மா’ என்ற பெயரில் பாலா இயக்கினார். ஆனால் படக்குழுவினர் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக முழுவதும் தயாரான படம் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து ‘ஆதித்ய வர்மா’ என்ற தலைப்பில் மீண்டும் படத்தை உருவாக்கினர். இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த படத்தின் பின்னணி வேலைகள் துவங்கவுள்ளது. மேலும் ‘ஆதித்ய வர்மா’ வரும் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.