தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
நடிகர் சங்கத்திற்கு 26 கோடி ரூபாய் செலவில் சென்னையில் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் சென்னை தி.நகர், அபிபுல்லா சாலை மற்றும் பிரகாசம் தெருவை இணைக்கும் 33 அடி அகல சாலையை ஆக்கிரமித்து கட்டப்படுவதாக ஸ்ரீரங்கன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மணி அளித்திருந்தனர். இந்நிலையில் சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டடம் கட்டப்படவில்லை என வழக்கறிஞர் ஆணையர் தெரிவித்ததால், கட்டிடம் கட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.