தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக அவதாரம் எடுக்கும் நடிகர் அரவிந்த் சாமி..?

இருபது வருடங்களுக்கு முன்பு அழகான கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் அரவிந்த் சாமி.

சில ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

தற்போது வில்லனாக சில படங்களிலும் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

அதற்கு முன்பே தனி ஒருவன் படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்திருந்தார்.

தற்போது தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தெலுங்கு திரைப்படத்தில் நடிகர் அரவிந்த் சாமி வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

பரசுராம் இயக்கவுள்ள சர்காரு வாரி பாட்டா எனும் திரைப்படத்தில் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இந்த ஜோடிக்கு வில்லனாக அரவிந்த் சுவாமி நடிக்க தான் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

error: Content is protected !!