தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் பிரபல நடிகர்

கடந்த ஆகஸ்டு மாதம் தமிழ்நாடு சூட்டிங் அசோசியேசன் சார்பில் கோவையில் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. அதில் 10 எம்ஏர் பிஸ்டல் சுற்றில் சென்னை ரைஸ் கிளப் சார்பில் நடிகர் அஜீத்குமார் கலந்து கொண்டார். இந்நிலையில் தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் 10 மீட்டர் ரைபிள் சுடும் சுற்றில் நடிகர் அஜீத்குமார் கலந்து கொண்டு வருகிறார். அதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.