நடிகர் அருண் விஜய்யுடன் இணையும் சைக்கோ இயக்குனர்.
உதயநிதி நடித்து வெளிவந்த சைக்கோ திரைப்படத்தை அடுத்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வந்தார் இயக்குனர் மிஷ்கின்.
ஆனால் நடிகர் விஷாலுக்கும் இயக்குனர் மிஷ்கினுக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இருந்து
இயக்குனர் மிஷ்கின் விலகினார்.
இதனையடுத்து நடிகர் சிம்பு நடிக்கவுள்ள திரைப்படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்குவார் என கூறப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் அருண்விஜய்யின் 32 படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கவுள்ளதாகவும் இந்த திரைப்படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
நடிகர் அருண் விஜய்யின் 31வது படமான் ஜிந்தாபாத் திரைப்படத்தை குற்றம் 23 பட இயக்குனர் அறிவழகன் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்னி சிறகுகள், பாக்ஸர், சினம் உள்ளிட்ட திரைப்படங்கள் நடிகர் அருண் விஜய் கைவசம் உள்ளது கவனிக்கத்தக்கது.











