நடிகர் சூர்யாவின் கருத்தை ஆதரித்து பேசிய சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்

புதிய கல்வி கொள்கை பற்றி நடிகர் சூர்யாவின் கருத்தை நான் ஆதரிக்கிறேன்’ என்று ‘காப்பான்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார். மேலும் அவர், “புதிய கல்வி கொள்கை பற்றி நடிகர் சூர்யா கருத்து தெரிவித்திருந்தார். அவரது கருத்து பிரதமர் மோடிக்கு கேட்டுவிட்டதாக தெரிகிறது. சூர்யாவின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.புதிய கல்விக் கொள்கை பற்றி சூர்யா பேசியதன் மூலம் அவரது இன்னொரு முகம் தெரிந்தது. நடிகர் சூர்யா மாணவர்கள் படும் கஷ்டத்தை கண் எதிரே பார்த்தவர். அப்படிபட்ட மாணவர்களுக்கு உதவிகளையும் சூர்யா செய்து விருகிறார். இன்றைய இளைஞர்கள் தமிழின் சிறப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.