நடிகர் சூர்யாவின் நடிக்கும் சூர்யா 42 திரைப்படத்தின்  இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டது!!!

சென்னை 21 ஆகஸ்ட் 2022 நடிகர் சூர்யாவின் நடிக்கும் சூர்யா 42 திரைப்படத்தின்  இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டது!!!

இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் நடிகர் சூர்யா நடிக்கும் திரைப்படம் இன்று தலைப்புச் செய்தியாகியுள்ளது.

நடிகர் சூர்யாவை இயக்கும் சிறுத்தை சிவாவின் திரைப்படத்திற்கு சூர்யா 42 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.

இந்த சூர்யா 42 திரைப்படத்தின்
பிரமாண்டமாக பூஜையுடன் இன்று காலை தொடங்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் மற்றும் பாலா இயக்கத்தில் வணங்கான், ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது அந்த இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கவுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு நடிகர் சூர்யா பங்கேற்க உள்ளார்.

சென்னை ராமாபுரத்தில் உள்ள அகரம் அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சூர்யா 42 திரைப்படத்தின் பூஜை விழாவில் நடிகர் சூர்யா, இயக்குநர் சிறுத்தை சிவா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்திற்கு கலவையான விமர்சனம் பெற்ற நிலையில், தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா நடிகர் சூர்யாவுடன் இணைகிறார்.

மிக் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் இந்த சூர்யா42 திரைப்படத்தை யூவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடீயோ க்ரீன் இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.

இந்த சூர்யா 42 திரைப்படத்தை இரண்டு பாகங்களாக உருவாகிறது.

இந்த சூர்யா 42 திரைபபடத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தயாரிப்பாளர்கள் KE ஞானவேல்ராஜா, விக்ரம் மற்றும் வம்சி தயாரிக்கும் இந்த சூர்யா 42 திரைப்படத்தில் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.