நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை 09 மார்ச் 2022
நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், சென்னையில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி நடிகர் சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளிவர இருப்பதால், நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஜெய் பீம் திரைப்படத்தின் சர்ச்சைக்கு நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்காததை தொடர்ந்து ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை கடலூரில் வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று மாவட்ட பாமக மாநில சங்க செயலாளர் ஜெயவர்மன் திரையரங்க உரிமையாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதற்காக, சென்னை கிருஷ்ண தெருவில் உள்ள நடிகர் சூர்யா வீட்டிற்கு ஏற்கனவே ஐந்து காவல்துறையினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு அளித்து வரும் நிலையில், தற்போது கூடுதலாக பாதுகாப்பு வழங்க சென்னை காவல்துறை திட்டமிட்டுள்ளது.











