நடிகர் சூர்யா நடிக்கும் அருவா திரைப்படத்தை இயக்கும் இயக்குனர் ஹரி 25% சம்பளத்தை குறைத்துள்ளார்.

நடிகர் சூர்யா நடிக்கவுள்ள அருவா படத்தை இயக்கவுள்ளார் இயக்குனர் ஹரி.

இந்த திரைப்படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்க, ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா இந்த அருவா திரைப்படத்தை தயாரிக்கிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதமே துவங்கயிருந்த நிலையில் கொரோனா லாக்டவுன் தள்ளி போய் உள்ளது.

இந்த கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவால் சினிமா தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்கள் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

நடிகர் விஜய் ஆண்டனி தான் அடுத்து நடிக்கும் மூன்று திரைப்படங்களில் சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் சம்பளத்தை குறைத்துக்கொள்வதாக அறிவித்தார்.

அதாவது அவரது சம்பளத்தில் அவர் சுமார் 1 கோடி ரூபாயை விட்டுக்கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் ஹரி தான் அடுத்து இயக்கும் அருவா திரைப்படத்திற்காக பேசப்பட்டுள்ள சம்பளத்தில் இருந்து 25 சதவீதத்தை குறைத்துக் கொள்கிறேன் என அறிவித்துள்ளார்.

இது பற்றி இயக்குனர் ஹரி வெளியிட்டுள்ளார் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது..

“வணக்கம்… இந்த கொரோனா பாதிப்பால் நம் திரையுலகம் மிகுந்தஹ் பாதிப்பு அடைந்துள்ளது , நம்முடைய தயாரிப்பாளர் நன்றாக இருந்தால்தான் நம் தொழில் மறுபடியும் நல்ல நிலைக்கு திரும்பும்.

இந்த சூழலை மனதில் கொண்டு, நான் அடுத்ததாக இயக்கப்போகும் “அருவா” திரைப்படத்திற்கு என்னுடைய சம்பத்தில் இருபத்து ஐந்து சதவிகிதம் (25%) குறைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளேன்” என கூறியுள்ளார்.