நடிகர் தனுஷின் நடிக்கும் ‘கர்ணன்’ பட காட்சி லீக்; இயக்குனரை கைது செய்ய நடிகர் கருணாஸ் மனு

நடிகர் தனுஷின் நடிக்கும் ‘கர்ணன்’ பட காட்சி லீக்; இயக்குனரை கைது செய்ய நடிகர் கருணாஸ் மனு

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன்.

பரியேறும் பெருமாள் படத்தை அடுத்து இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் இப்பட சூட்டிங்கில் இருந்து ஒரு காட்சி இணையத்தில் லீக்காகி வைரல் ஆகி வருகிறது.

அந்த காட்சியில் மணியாச்சி காவல்நிலையம் என்று பெயரிட்டு அந்த காவல் நிலையத்தை தனுஷ் தாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு சார்பாக காவல்துறை தலைவரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் மாநில அமைப்பு செயலாளரும் நெல்லை மாநகர் தெற்கு மாவட்டச் செயலாளருமான பவானி வேல்முருகன், காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது….

“1991-ல் கொடியன்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்து எடுக்கப்பட்டு வரும் கர்ணன் படத்தை தடை செய்ய வேண்டும். மற்றும் அந்த படத்தின் படப்பிடிப்பை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும்

தென்மாவட்டங்களில் அமைதியான சூழ்நிலை நிலவி வருகின்ற நிலையில் இதுபோன்ற திரைப்படங்களால் மீண்டும் ஒரு கலவர சூழ்நிலை ஏற்படுகிறது. ஆகையால் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மற்றும் அந்தத் திரைப்படத்தில் மணியாச்சி காவல்நிலையம் என்று பெயரிட்டு அந்த காவல்நிலையத்தை தனுஷ் தாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. இது காவல்துறை கண்ணியத்தையும் கெடுப்பதாக அமைகிறது.

குறிப்பாக அந்தத் திரைப்படத்தில் தேவர் சமூகத்தை மிகவும் விமர்சித்து வருகிற மாதிரி காட்சிகள் இடம்பெறுகிறது. தொடர்ந்து இதுபோன்ற திரைப்படஙகள் எடுத்து இரு சமூக மக்களிடையே சாதி கலவரத்தை தூண்டி வருகிற மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்”

இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!