கர்ணன் திரைப்படம் நாளை கண்டிப்பாக திரைக்கு வரும் – தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு

சென்னை 08 ஏபரல் 2021

கர்ணன் திரைப்படம் நாளை கண்டிப்பாக திரைக்கு வரும் – தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு

கலைப்புலி ஏஸ் தாணு வி கிரேஷன்ஸ் சார்பில் நடிகர் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கி தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கர்ணன்’.

இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார்.

மேலும் திரைப்படத்தில் லால், யோகிபாபு, லட்சுமி பிரியா, கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் நாளை ஏப்ரல் 9-ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக வருகிற ஏப்ரல் 10-ந் தேதி முதல் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் தான் இயங்க வேண்டும் என்ற அரசு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போகும் என்று செய்திகள் வெளியானது.

இதற்கு கர்ணன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு, ‘சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும், அரசின் அறிவிப்பின் படி, 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிடப்படும், கர்ணன் திரைப்படத்திற்கு உங்கள் பேராதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்’

அவருடைய டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியிருக்கிறார்

error: Content is protected !!