நடிகர் தனுஷ் நடித்த கர்ணன் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது தனுஷ் கதாபாத்திரத்தில் இவரா.?

சென்னை 28 ஏப்ரல் 2021

நடிகர் தனுஷ் நடித்த கர்ணன் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது தனுஷ் கதாபாத்திரத்தில் இவரா.?

கலைப்புலி ஏஸ். தாணு வி கிரேஷன்ஸ் சார்பில் தயாரித்த இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த படம் ‘அசுரன்’.

அசுரன் திரைப்படத்தின் தெலுங்கு மொழி மாற்றம் உரிமையை சுரேஷ் புரொடக்சன்ஸ் மற்றும் கலைப்புலி ஏஸ் தாணுவும்
இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

தெலுங்கில் ‘நாராப்பா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்
நடித்திருக்கிறார்.

இந்த வருடம் மே 14ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டு இருந்தது.

ஆனால் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகமாக இருப்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கலைப்புலி ஏஸ் தாணு & தனுஷ் வெற்றிக் கூட்டணியின் அடுத்த திரைப்படமான ‘கர்ணன்’ திரைப்படமும் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட உள்ளதாம்.

இந்த கர்ணன் திரைப்படத்தின் தெலுங்கு மொழி மாற்றம் உரிமையை தயாரிப்பாளர் கலைப்புலி ஏஸ் தாணுவிடம் இருந்து தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் பெல்லம் கொண்டா சுரேஷ் என்பவர் வாங்கியிருக்கிறார்.

கர்ணன் தெலுங்கு மொழி மாற்றம் திரைப்படத்தில் கதாநாயகனாக அவருடைய மகன் பெல்லம்கொண்டா சாய் ஶ்ரீநிவாஸ் நடிக்கவிருக்கிறாராம்.

இந்த பெல்லம்கொண்டா சாய் ஶ்ரீநிவாஸ் இதற்கு முன்பே ‘சுந்தரபாண்டியன்’, ‘ராட்சசன்’ ஆகிய தெலுங்கு மொழி மாற்றம் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது, ‘கர்ணன்’ தெலுங்கு மொழி மாற்றம் திரைப்படத்திலும் நடிக்கவிருக்கிறார் பெல்லம் கொண்டா சாய் ஶ்ரீநிவாஸ்.

இந்த கர்ணன் திரைப்படத்திற்கு தெலுங்கில் இயக்குநர் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும்.

இதுவரை 8 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார் பெல்லம் கொண்டா சாய் ஶ்ரீநிவாஸ்.

மேலும் ராஜமெளலி இயக்கிய ‘சத்ரபதி’ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து பாலிவுட்டிலும் அறிமுகமாகவுள்ளார் சாய் ஶ்ரீநிவாஸ் என்பது கூடுதல் தகவல்.

error: Content is protected !!