நடிகர் தனுஷ் பிறந்தநாள் 1500 ரசிகர்கள் ஒரே நேரத்தில் ரத்ததானம் செய்து சாதனை படைத்துள்ளனர்.

இன்று நடிகர் தனுஷின் தனது 36வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி 1500 ரசிகர்கள் ஒரே நேரத்தில் ரத்ததானம் செய்து சாதனை படைத்துள்ளனர். நேற்று சென்னை ஏசிஎஸ் மருத்துவ கல்லூரியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மற்றும் மும்பையை சேர்ந்த தனுஷ் ரசிகர்கள் மன்றத்தினர் கலந்து கொண்டனர். 

மேலும் இது குறித்து தனுஷ் பேசுகையில், “ரத்த தானம் செய்த உங்களை நினைத்து மிகவும் பெருமை படுகிறேன். கலந்து கொண்ட அனைவருக்கும் மிகவும் நன்றி. அனைவரிடமும் அன்பை மட்டும் செலுத்துவோம்” என கலந்து கொண்ட அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்