நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது

தமிழில் பிரகாஷ்ராஜ் இயக்கி நடித்த ‘உன் சமையல் அறையில்’ என்ற படத்தை ஹிந்தியில் ‘தட்கா’ என்ற தலைப்பில் ரீமேக் செய்துள்ளார் பிரகாஷ்ராஜ். இதில் டாப்சி, ஸ்ரேயா, நானா படேகர், அலிபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனிடையே கடந்த 2016ம் ஆண்டு எஸ்சல் விஷன் நிறுவனத்திடம் வாங்கிய ரூபாய் 5.88 கோடி பணத்தை திருப்பி செலுத்தாததால் அந்த நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதனை தொடர்ந்து ஜூலை 15ம் தேதிக்குள் தொகையை திருப்பி அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் முதல் தவணையாக பிரகாஷ்ராஜ் வழங்கிய ரூபாய் 2 கோடிக்கான காசோலை பணம் இல்லாத காரணத்தால் திரும்பியுள்ளது. இதனால் நீதிமன்றம் பிரகாஷ்ராஜ்க்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து எஸ்சல் விஷன் நிறுவனத்திடம் பிரகாஷ்ராஜ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.