நடிகர் கார்த்தியின் நடிக்கும் கைதி 2 திரைப்படத்திற்கு கேரள மாநிலம் கொல்லம் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னை 04 ஜூலை 2021

நடிகர் கார்த்தியின் நடிக்கும் கைதி 2 திரைப்படத்திற்கு கேரள மாநிலம் கொல்லம் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் கைதி திரைப்படம் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கைதி திரைப்படத்தின் கதை என்னுடையது என கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றம் மூலம் தடை விதித்துள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் கைதி.

இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் என்பவர் தான் எழுதிய கதையை தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபுவிடம் கூறியதாகவும் கதை பிடித்திருந்ததால் இந்த கதையை நிரைப்படமாக்க எஸ்.ஆர்.பிரபு ஒப்புதல் வழங்கியதோடு அதற்கான முன் தொகையாக ரூ.10 ஆயிரத்தை தன்னிடம் வழங்கியதாகவும் கூறியிருக்கிறார்.

அதன் பிறகு கைதி திரைப்படத்தை அண்மையில் ஊரடங்கில் பார்த்தபோதுதான் அதிர்ச்சி அடைந்ததாகவும் தான் சொன்ன கதையின் இரண்டாம் பகுதியை எடுத்துக்கொண்டு கைதி முழு படத்தையும் அவர்கள் உருவாக்கி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதனால் தனக்கு நஷ்ட ஈடாக 4 கோடி ரூபாயை தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு வழங்க வேண்டுமெனவும், கேரள மாநிலம் கொல்லம் நீதிமன்றத்தில் ராஜீவ் ரஞ்சன் புகார் அளித்திருந்தார்.

இதை விசாரித்த நீதிபதி தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபுவுக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு கைதி திரைப்படத்தை பிற மொழிகளில் மொழி மாற்றம் செய்யவும் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் கேரள மாநிலம் கொல்லம் தடை விதித்துள்ளது.

error: Content is protected !!