நடிகர் விஜயின் ரசிகர்கள் இந்தளவுக்கா கீழ இறங்குவாங்க தெரியாமல் போச்சே கிண்டலடிக்கும் அஜித்குமார் ரசிகர்கள்.
தமிழ் திரைப்பட உலகில் தளபதி விஜய்க்கு உள்ள மாஸ் எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான்.
இவரது ரசிகர்களும் அடிக்கடி மாஸான விஷயங்களை செய்து வருகின்றனர்.
பிரம்மாண்ட கட் அவுட் முதல் FDFS வரை இவர்களின் வரவேற்பும் பெரிய அளவில் இருக்கும்.
ட்விட்டர் டிரெண்டிங்கிலும் அடிக்கடி அசத்தி வருவது இவர்களின் வழக்கம்.
இந்த நிலையில் நாளை ஆகஸ்ட் 2 மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் தளபதி விஜய் நடித்த பிகில் படத்தை திரையிட உள்ளனர்.
இது தொடர்பாக தளபதி விஜய் ரசிகர்கள் பிட் நோட்டீஸ் போஸ்டர் அடித்துள்ளனர்.
அதில்…. பிகில் திரைப்படத்தை பாருங்க.. டிஆர்பி யை உயர்த்துங்க என்ற வாசகத்தை அடித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் தளபதி விஜய்யின் TRP வெற்றியை கொண்டாடும் வகையில் அவரது ரசிகர்கள் ஒரு போஸ்டர் அடித்துள்ளனர்.
இந்த லாக்டவுனில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான தளபதி விஜய்யின் திரைப்படங்களுக்கு செம வரவேற்பு கிடைத்துள்ளது.
ஏற்கனவே மதுரையைச் சேர்ந்த தளபதி விஜய் ரசிகர்கள் ஜூலை 26 தேதி தெறி திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பாவதை வாழ்த்தி வடிவமைத்துள்ள போஸ்டரில், ”தாய்மார்களுக்கு சன் டிவி ஒரு வாக்கியம், சன் டிவிக்கே தளபதி ஒரு பாக்கியம். மேலும், TRP என்பதற்கு, தளபதி ராஜ்ஜியம் பார்த்துக்கோ என புது அர்த்தம் கொடுத்த அசத்தியிருக்கிறார்கள். இதையடுத்து இந்த போஸ்டர் இணையத்தில் வைரல் அடித்து வருகிறது.
திரைப்பட ரிலீசுக்கு போஸ்டர் அடித்த காலம் போய்… இப்ப இவ்வளவு கீழ் இறங்கி விட்டார்களே என நெட்டிசன்கள் & தல ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.