நடிகர் விஜய்க்கு முதல்வர் ஆசை வந்தால் அது தவறில்லை – பிரபல அரசியல்வாதி
விஜய் உள்பட நடிகர்களுக்கு முதல்வர் ஆசை வந்தால் அது தவறில்லை என்று ‘சர்கார்’ படத்தில் நடித்தவரும் பழம்பெரும் அரசியல்வாதியுமான பழ கருப்பையா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் “எல்லா நடிகர்களுக்கும் அரசியலுக்கு வருவதற்கு விருப்பம் இருக்கின்றது. அதில் எந்த தவறும் இல்லை. முதல்வர் ஆசை அவர்களுக்கு வந்தாலும் தவறு இல்லை. ஏனெனில் அவர்கள் நடிகர்களாக இருப்பதால் அவர்கள் கூறும் கருத்து எளிதில் மக்களிடம் போய் சேருகிறது” என்றும் பழ கருப்பையா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.











