ஆந்திரா திரையரங்குகளுக்கு 3 மாத மின் கட்டணம் முழுமையாக ரத்து.! திரையரங்குகளுக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் அறிவிப்பு!

சென்னை :22 டிசம்பர் 2020

கொரோனா வைரஸ் நோய் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இந்தியா முழுவதும் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன.

கிட்டத்தட்ட 7 மாத இடைவெளிக்கு பிறகு கடந்த அக்டோபர் மாதம் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டன.

50% பார்வையாளர்களுடன் அரசு பிறப்பித்த கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் படிதான் திரையரங்குகள் அனைத்தும் திறக்கபட்டன.

ஆனாலும் திரையரங்குகளில் கூட்டமே இல்லை.

இந்த நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் அதிரடியான அறிவிப்பை தெரிவித்துள்ளார்.

அதில்…

ஆந்திராவில் உள்ள அனைத்து திரையரங்குகளுக்கு ஏப்ரல் மே ஜூன் ஆகிய 3 மாத மின் கட்டணம் முழுமையாக ரத்து.!

தற்போதைய மின் கட்டணத்தை தவணை முறையில் கட்டவும் அனுமதி .!!

மேலும் நகரங்கள் புறநகர்களில் உள்ள திரையரங்குகளுக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.!!!

கிராமப்புறங்களில் உள்ள திரையரங்குகளுக்கு ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.

இந்த திரையரங்குகளுக்கு கொடுக்கும் கடனுக்கு வட்டி இல்லை என்றும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் அறிவிப்பு!

நேற்று டிசம்பர் 21ஆம் தேதி ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் 48வது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திரா அரசு உதவியது போல் தமிழக அரசு உதவுமா தமிழக திரையரங்கு உரிமையாளர்களுக்கு உதவுமா .? என்பது கேள்விக்குறியாக உள்ளது