தமிழக முதல்வர், பாரத பிரதமர் மற்றும் ஜனாதிபதி அவர்களுக்கு நடிகர் அபி சரவணனின் கோரிக்கை !
தமிழ்நாடு அரசு இன்று 500 புதிய ஆம்புலன்ஸ்-களின் சேவையை துவக்கியுள்ள நிலையில் முதல்வர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி அவர்களுக்கு நடிகர் அபி சரவணன் கோரிக்கை!கடந்த இரு வாரங்களில் ஆறு மரணச்செய்தி.. அதில் மூன்று எனது நெருங்கிய குடும்ப உறவினர்கள்.. அனைத்து மரணங்களும் தீடீர் மாரடைப்பு..ஒரு மரணத்தை நேரடியாக கண்டவன் என்ற முறையிலும் அந்த உயிர் பிரியும் போது ஆம்புலன்ஸ்க்கு நான்குமுறை அழைத்தும் பயனளிக்காமல் நேரமின்மையால் கையாலாகமால் சித்தப்பா உயிரை பறிகொடுத்து கண்ணீரோடு நின்றவன் என்ற முறையிலும் வலிகளுடன் இந்த பதிவு…
இந்த பதிவு
பாரதபிரதமர்


இந்திய குடியரசுத்தலைவர்
உயர் திரு. #ராம்நாத்கோவிந்த் அவர்கள்


தமிழக முதல்வர்
உயர்திரு . #எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்


தமிழக சுகாதாரதுறை அமைச்சர்
உயர்திரு. #விஜயபாஸ்கர் அவர்கள்தமிழகஅரசு தலைமைசெயலர்
திரு. சண்முகம் அவர்கள்சுகாதாரதுறை செயலர்
திரு .ராதா கிருஷ்ணன் அவர்கள்
மற்றும் சம்பந்தப்பட்ட சுகாதர துறை உயரதிகாரிகள்
முக்கியமாக
அனைத்து மீடியா பத்திரிக்கை செய்தி ஔிபரப்பு நிறுவனங்களுக்கும்
அனைவருக்கமானது…
நமது இந்தியாவில் அவசர மருத்துவ தேவைக்கு அரசு ஆம்புலன்ஸ உள்ளது… “108 ” என்ற இலக்கத்தை அழைப்பதன் மூலம் உடனடி மருத்துவ உதவி கிடைக்கும்..
உண்மையில் பலமுறை நானே சாலையில் ஏதாவது விபத்து எனில் அந்த எண்ணிற்கு போன் செய்து அவர்கள் வரும் வரை காத்திருந்து காயம் பட்டவரை மருத்துவமனை அழைத்து சென்று இருக்கிறேன்.

மெடிக்கல் அவசர தேவை என்றவுடன் #108 நம்பருக்கு போன் செய்தவுடன் நம்மை தொடர்பு கொள்ளும் ஆம்புலன்ஸ கால் சென்டரில் நாம் எங்கிருந்து அழைக்கிறோம் அதாவதுஎந்த மாவட்டம்…எந்த தாலுகா…என்ன தெரு என்பதை தெளிவாக கேட்கிறார்கள்…இ்ன்றும் இந்த முறைதான் பலரது உயிரை காப்பாற்றி வருகிறது…எனது மனதில் தோன்றிய எண்ணம்…
அவசர தேவை என்றால் மட்டுமே நாம் ஆம்புலன்ஸ் அழைக்கிறோம் அல்லவா…
இன்றைய தகவல் தொழில் நுட்பத்தில் எவ்வளவோ முன்னேற்றம் இருக்கிறது .
எனவே எந்த எண்ணில் இருந்து அவசர மருததுவ தேவைக்காக ஆம்புலன்ஸ் அழைக்கிறார்களோ அவர்களது மொபைல் எண்ணை வைத்து மற்றும் அல்லது லேண்ட் போனாக இருந்தால் ஜி.பி.எஸ் வைத்து அந்த ஏரியாவை அல்லது பகுதியை துல்லியமாக ஏன் அந்த பகுதியின் ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு வண்டியில் உள்ள ஜி பி எஸ் கருவி மூலம் தெரிவிக்ககூடாது?
இதன்மூலம் நேரம் வினாடிகளில் வீணடிக்கப்படுவது தவிர்க்கபடலாம் அல்லவா.?
உயிருக்கு போராடுபவர்களுக்கு ஒவ்வொரு வினாடியும் இன்றியமையாதது.. உடன் இருப்பவர்களின் மனநிலையும் பதட்டத்தில் அல்லவா இருக்கும்…
ஏனெனில் கண்முண்ணே ஒரு உயிர் போரடி கொண்டிருக்கம் போது தாலுகா.. வட்டம் பகுதி என விலாவரியாக அனைவராலும் தெளிவாக கூறமுடியாது….அல்லவா…
தயவுசெய்து இதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்….
அல்லது
இந்த முறை சாதாரண கால் டாக்ஸி மற்றும் உணவு டெலிவரிக்கு மட்டும் சாத்தியம் எனில் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ்கு இதே நிச்சயம் சாத்தியமே…
மேலும்
கோவிட் நோய்க்காக ஆரோக்கிய சேது ஆப் அறிமுகபடுத்தியது போல அவசர தேவையான ஆம்புலன்ஸ் போலிீஸ் தீயணைப்பு போன்றவற்வைகளுக்கு தனிச்செயலியை அனைத்து மொபைல் கட்டாய செயலியாக அறிமுகபடுத்தலாமே..
இது எனது எண்ணம் மட்டுமே… இதை செயலாக்க முடியுமா என்பதை பரிசீலனை செய்யலாமே..?
மனவலிகளுடன்
அபிசரவணன்…
Related posts:
மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை வைத்த தயாரிப்பாளர்/இயக்குநர் சுரேஷ் காமாட்சி.
தமிழகத்தில் வாழும் அனைத்து நாடகக் கலைஞர்கள் மற்றும் கலைநிகழ்ச்சி கலைஞர்கள் அனைவரும் கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றனர் தமிழக முதல்வருக்கு கோரிக்கை.
மாண்புமிகு தமிழக முதல்வர் உயர்திரு தளபதி மு க ஸ்டாலின் அவர்களின் கனிவான கவனத்திற்கு, நடிகர் உதயாவின் கோரிக்கை.
திரையரங்குகள் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கோரிக்கை வைத்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தலைவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.
கள்ளன் திரைப்படத்தை ஓட விடாமல் தடுக்கும் ஜாதி வெறி பிடித்த ஜாதி சங்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இயக்குனர் சந்திரா தங்கராஜ் தமிழக முதல்வர் அவர்களுக்கு வேண்டுகோள்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அம்மா உணவகமாக ‘ தொடரச் செய்யுங்கள்! இது ஒரு வேண்டுகோள்தான் இயக்குநர் பேரரசுு.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழக அமைச்சரவை பட்டியல் இதோ…
பிரதமர் நிதிக்கு தமிழக முதல்வர் நிதிக்கு நிதியுதவி வழங்கி இருக்கிறார் நடிகை பார்வதி நாயர்.!
‘இரவின் நிழல்’ திரைப்படத்தை பார்த்த மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடிகர் – இயக்குனர் இராதாகிருஷ்ணன் பார்த்திபனுக்கு பாராட்டு!!!
மதுவை வாங்குபவர்களின் ஆதார் எண்ணை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு மது பாட்டில்களை விற்பனை செய்ய வேண்டும்’.தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த தயாரிப்பாளர் JSK சதிஷ் குமார்

