நடிகர் விஷால் ரூபாய்.4 கோடி கட்டினால் வழக்கை முடித்து வைக்கலாம்

நடிகர் விஷால் வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வருமான வரித்துறையினர் பல முறை சம்மன் அனுப்பியும், நடிகர் விஷால் தரப்பில் இருந்து பதிலளிக்கவில்லை. இதனையடுத்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறையினர் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் விஷால் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் விஷால் ரூ.4 கோடி கட்டினால் வரி ஏய்ப்பு வழக்கை முடித்து வைக்கலாம் என்று கருத்து கூறிய ⚖நீதிபதி, இந்த வழக்கை வருகின்ற செப்டம்பர் மாதம் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார்

error: Content is protected !!