நடிகை மதுமிதா மீது விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ போட்டியாளர்களில் ஒருவரான நடிகை மதுமிதா சமீபத்தில் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி சட்டப்பிரிவு மேலாளர், நடிகை மதுமிதா மீது சென்னை கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் மதுமிதா ஒப்பந்தப்படி 11 லட்சத்தி, 50 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளதாகவும், மீதமுள்ள 42 நாட்களுக்கு பாக்கி பணம் தருவதாக கூறி இருந்ததாகவும் ஆனால் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரை மதுமிதா தொடர்பு கொண்டு இரண்டு நாட்களில் பணம் தரவில்லை என்றால் தற்கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டுள்ளது.