நடிகை வனிதா விஜயகுமார் மீது குடியிருப்பு வாசிகள் போலீஸ் புகார் அளித்துள்ளனர்..
இவர் தமிழ் திரைப்பட உலகிற்கு சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் தளபதி விஜய்க்கு ஜோடியாக அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வந்தார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் நடிகை வனிதா விஜயகுமார் பிரபலமானவர்.
தனது 19 வயதிலேயே நடிகர் ஆகாஷ் என்பவரை முதல் திருமணம் செய்து கொண்ட நடிகை வனிதா விஜயகுமாருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
அதன் பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவர் ஆகாஷ் என்பவரை நடிகை வனிதா விஜயகுமார் பிரிந்தார்.
நடிகை வனிதா விஜயகுமார் ஆந்திராவை சேர்ந்த ஆனந்த் ராஜன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார்
அவருடன் ஒரு பெண் பிள்ளையை பெற்றெடுத்த நடிகை வனிதா, அதன் பின்னர் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.
மூத்த மகன் ஸ்ரீஹரி அப்பாவுடன் வசித்து வர மற்ற இரண்டு மகள்களுடன் நடிகை வனிதா தனியாக வசித்து வந்தார்.
ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரபான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார்.
எல்லாருக்கும் தான் திருமணம் நடக்கிறது. ஒரு சிலர் 5, 10 திருமணங்கள் ஏமாற்றி செய்துக் கொள்கின்றனர்.
ஆனால் நடிகை வனிதா விஜயகுமார் செய்துக் கொண்ட 3வது திருமணம் தான் கடந்த ஒரு மாதமாக இணையத்தில் பேசும்பொருளாக மாறியுள்ளது.
இவரின் திருமணத்தை பற்றியும் அங்கு வனிதா விஜயகுமார் தனது கணவர் பீட்டரை பாலை முத்தமிட்டதை குறித்தும் பல்வேறு சர்ச்சை எழுந்தன.
எனவே தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார் வனிதா விஜயகுமார்.
சூர்யா தேவி, நடிகர் கஸ்தூரி லெட்சுமி ராம் கிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது நடிகை வனிதா விஜயகுமார் போலீசில் புகாரளித்தார்.
இந்த நிலையில் போரூர் அடுத்த ஐயப்பன் தாங்கலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் வனிதா விஜயகுமார் கொரோனா வைரஸ் நோய் தொற்று காலத்தில் முறையாக அனுமதி பெறாமல் நிகழ்ச்சி நடத்தியதாக அடுக்குமாடி குடியிருப்பின் பொது செயலாளர் நிஷா தோட்டா காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
நிஷா தோட்டா அளித்த புகாரின் பேரில் வனிதா விஜயகுமார் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது காவல்துறை.











