படவெட்டு (மலையாளம்) திரை விமர்சனம் ரேட்டிங் :- 3.25 / 5.

நடிகர் நடிகைகள் :- நிவின் பாலி, அதிதி பாலன், ஷாமி திலகன், ஷினே டாம் சக்கோ, இந்த்ரன்ஸ், விஜயராகவன், மனோஜ் ஓமன், ரம்யா சுரேஷ், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- லிஜூ கிருஷ்ணா.

ஒளிப்பதிவு :- தீபக் டி மேனன்.

படத்தொகுப்பு :- ஷாபிக் முகமது அலி.

இசை :- கோவிந்த் வசந்தா.

தயாரிப்பு :- யோட்லீ பிலிம்ஸ் & சன்னி வாய்ன்ப்.

ரேட்டிங் :- 3.25 / 5.

 

எங்களுடைய மண் எங்களுக்கே சொந்தம் எனும் மண்ணுரிமைப் போராட்டத்தை மையப்படுத்தி கன்னட திரைப்பட உலகில் இயக்குனர் நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து சென்ற மாதம் வெளியான “காந்தாரா” என்ற திரைப்படம் வெளி வந்து மாபெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது.

அதற்கு இணையாக மலையாள திரைப்பட உலகில் நடிகர் நிவின்பாலி கதாநாயகனாக நடித்திருக்கும் படவெட்டு தற்போது வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டத்திலி மல்லூர் என்ற கிராமத்தில் மல்லூர் எக்ஸ்பிரஸ் என்று பெயரெடுத்த மிகப்பெரிய ஓட்டப்பந்தய விளையாட்டு வீரரான கதாநாயகன் நிவின் பாலி.

துள்ளுந்துப் பந்தயம் ஆகியனவற்றில் முன்னிலை வகித்த அவரை துள்ளுந்துப் பந்தயத்தின் போது கால்லில் ஏற்பட்ட விபத்து அவரை வீட்டிலேயே முடக்கிப்போடுகிறது.

கதாநாயகன் நிவின்பாலி தொப்பையும் தொந்தியுமாய் இருப்பதோடு எப்போது பார்த்தாலும் சோம்பேறித்தனமாக இருக்கிறார்

இதனைடுத்து விவசாயத்தை நம்பியிருக்கும் கிராமத்தில், கிராம மக்களின் தேவைகளை கிராம சபை நிர்வாகிகள் பூர்த்தி செய்து கொடுக்கிறார்கள்.

இதற்கிடையே, மக்களுக்கு இலவச திட்டங்களை அறிவித்து அந்த கிராமத்தில் காலூன்றும் அரசியல் கட்சியின் தலைவர், அந்த கிராமத்து விவசாய நிலங்களை அபகரிக்க திட்டம் போடுகிறார்.

ஜே எஸ் பி கட்சியின் தலைவர் நடிகர் ஷம்மிதிலகன்
அரசியல்வாதியின் திட்டத்தின் துவக்கமாக இருக்கும் கதாநாயகன் நிவின் பாலி, ஒரு கட்டத்தில் பொருத்தது போதும் என்று பொங்கி எழுகிறார்.

சோம்பேறித்தனத்திலிருந்து கதாநாயகன் நிவின் பாலி மீண்டாரா? மீளாவில்லையா?
அந்த அரசியல்வாதியும் திட்டமும் என்னவானது? அவருடைய இயலாமை எப்படிப்பட்ட விளைவுகளையெல்லாம்
ஏற்படுத்துகின்றன? என்பதுதான் இந்த படவெட்டு திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்தப் படவெட்டு திரைப்படத்தில் நிவின் பாலி கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

கதாநாயகன் நிவின்பாலி இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டிருக்கிறாரே தெரியவில்லை.

அமைதியாக அதேசமயம் ஆழமான அவருடைய நடிப்பு திரைப்படத்துக்கு பெரும்பலமாக அமைந்திருக்கிறது.

இறுதியில் அவர் எடுக்கும் விஸ்வரூபம் எல்லாவற்றையும் நேர்மறையாக்கிவிடுகிறது.

இந்தப் படவெட்டு திரைப்படத்தில் கதாநாயகியாக அதிதி பாலன் நடித்து இருக்கிறார்.

கதாநாயகன் நிவின்பாலியை ஊக்கப்படுத்துவதற்காகவே கதாநாயகி அதிதிபாலன் கதையில் சேர்த்திருக்கிறார்கள்

பார்வையிலேயே தனது ஒட்டு மொத்த காதலையும் வெளிப்படுத்தும் சக்தி படைத்தவராக இருக்கிறார் கதாநாயகி அதிதி பாலன்

கதாநாயகி அதிதி பாலன் கண்களிலேயே அவர் வெளிப்படுத்தும் உணர்வுகளும் நடிப்பும் மிக மிக அருமையாக உள்ளது..

கதாநாயகியாக நடித்திருக்கும் அதிதி பாலனுக்கு கதாநாயகன் நிவின் பாலிக்கும் காதல் காட்சிகள் இல்லை பாடல்கள் காட்சிகள் இல்லை.

ஜே எஸ் பி கட்சியின் தலைவராக வரும் வில்லன் நடிகர் ஷம்மிதிலகன் மலையாளத் திரைப்பட உலகிலும் தமிழ் திரைப்பட உலகிலும் கலக்கிய நடிகர் திலகனின் மகன் தனது தந்தைக்கு இணையாக நடிப்பில் மிரட்டி இருக்கிறார்

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இசை மற்றும் பின்னணி இசை இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்துள்ளது.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல் அனைத்தும் இனிமை.

அதிலும் கதாநாயகன் நிவின் பாலி – கதாநாயகி அதிதி பாலன் காதலை பறிமாறும் காட்சியில் ஒலிக்கும் அந்த மழை பாடல் திரும்ப திரும்ப கேட்கும் ரகம்.

பின்னணி இசை கதையோடு பயணிப்பதோடு மட்டும் அல்லாமல் காட்சிகளுக்குள் திரைப்படம் பார்க்கும் நம்மையும் அழைத்து செல்கிறது.

இசையமைப்பாளர்  கோவிந்த் வசந்தாவின் இசை இநத திரைப்படத்தின் மிகப்பெரிய மதிப்பை உயர்த்துகிறது.

தீபக் டி.மேனனின் ஒளிப்பதிவு கேரள கிராமத்தின் அழகை நம் கண்முன் நிறுத்துவதோடு, அவர்களின் வாழ்வியலை எந்தவித ஒப்பணையும் இல்லாமல்  காட்சிப்படுத்தியிருப்பது திரைப்படத்திற்கு கூடுதல் பலம்.

தீபக் டி மேனனின் ஒளிப்பதிவில் கண்ணூரின் அழகு கட்டற்றுக் காணக்கிடைக்கிறது.

ஷபிக் முகமது அலியின் படத்தொகுப்பு நேர்த்தி.

எந்த ஒரு கட்சியின் பெயரையும் குறிப்பிடாமல், அவர்களின் அடையாளத்தை காட்டாமல் மிக நாசுக்காக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கும் இயக்குனர் தீபக் டி மேனன்.

மக்கள் யாரை எதிர்க்க வேண்டும், யாரை ஆதரிக்க வேண்டும் என்பதை மிக தெள்ளத் தெளிவாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் தீபக் டி மேனன்.

நம் மண், நம் வீடு, நம் நாடு” என்ற மக்கள் முழக்கத்தோடு முடிவடையும் திரைப்படம், யாருக்கு எதிராக இந்த முழக்கத்தை நாம் எழுப்ப வேண்டும் என்பதை மிக அழகாக சொல்லு திரைப்படம், இப்படிப்பட்ட போர்குனம் இல்லை என்றால், நாம் எதையெல்லாம், எப்படியெல்லாம் அவர்களால் இழக்க நேரிடும் என்பதை எச்சரிக்கையாகவும் சொல்லி உள்ளார் இயக்குனர் தீபக் டி மேனன்.

மொத்தத்தில் படவெட்டு திரைப்படம்  நம்து மண் நமக்குத்தான்.