விருமன் திரை விமர்சனம் ரேட்டிங் :- 3.75 / 5

நடிகர் நடிகைகள் :-  கார்த்தி, ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், அதிதி ஷங்கர், சூரி, மனோஜ் பாரதிராஜா, அருள் தாஸ், ஆர்.கே. சுரேஷ், சரண்யா பொன்வண்ணன், வடிவுக்கரசி, கருணாஸ், சிங்கம்புலி, வாசு மித்திரன், ராஜ்குமார், இந்துமதி, நந்தினி, ஏ.கே சுந்தர், அருந்ததி, ரிஷி, இந்திரஜா ரோபோ சங்கர், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- முத்தையா.

ஒளிப்பதிவு :- செல்வகுமார் எஸ்.கே.

படத்தொகுப்பு :- வெங்கட் ராஜன்.

இசை :- .யுவன்ஷங்கர் ராஜா.

தயாரிப்பு :- 2 டி என்டர்டெயின்மென்ட்.

ரேட்டிங் :- 3.75 / 5

 

தமிழ் திரைப்பட உலகில் உறவுகளின் முக்கியத்துவத்தை கூறும் திரைபபடங்கள் வெகுவாக தற்போது குறைந்து வருகிறது.

இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் முத்தையா போன்ற ஒரு சில இயக்குனர்கள் மட்டும்தான் இன்னும் தாங்களது பிறந்து வளர்ந்த மண்ணை பற்றியும், மக்களை பற்றியும் சொந்த பந்தங்களை பற்றியும் திரைப்படமாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக பாரம்பரியத்தில் கூட்டுக் குடும்பம் என பல காலமாக வாழ்ந்து வந்த நமது மக்கள் தற்போது கூட்டுக் குடும்பம் என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு நமது சொந்த பந்தங்கள் சிதறி கிடக்கிறார்கள்.

இந்த அவசர காலங்களில் உடன் பிறந்தவர்கள், வாய் தகப்பனாரின் உறவினர்கள் அனைவரையும் திருமணம் மற்றும் துக்க காரியங்கள் போன்ற விழாக்களில் மட்டுமே கொஞ்ச நேரமாவது சொந்த பந்தங்களை பார்த்துப் பேச முடிகிறது.

பலருக்கும் சொந்த பந்தம் உறவுகள் இல்லாமல் தனித்து வாழ்வதுதான் பிடித்திருக்கிறது.

உறவுகளால் நாம் எவ்வளவு உன்னதமாக இருப்போம் என்பதை கூறும் இந்த திரைப்படத்தில் மிக அழுத்தமாக கூடியிருக்கிறார்கள் இயக்குனர் முத்தையா.

இயக்குனர் முத்தையா தனது முந்தையப் திரைப்படங்களில் ஒரு குறிப்பிட்ட சாதியை மட்டும் தூக்கிப் பிடிக்கும் கதைகளை மட்டுமே கொடுத்திருந்தார்.

இந்த விரும்பன் திரைப்படத்தில் இயக்குனர் முத்தையா கொஞ்சம் சாதியை கைவிட்டிருப்பது மிக் பெரிய ஆச்சரியம்தான்.

ஊர் தாசில்தாராக பிரகாஷ் ராஜ் இருக்கும் இவருக்கு நான்கு மகன்கள் இதில் கடைசி மகன் கதாநாயகன் கார்த்தி.

தனது தாய் சரண்யா பொன்வண்ணனின் மறைவிற்கு காரணமான தனது தந்தை பிரகாஷ்ராஜ் மீது கொலை வெறி கொண்டிருப்பவர் கதாநாயகன் கார்த்தி.

தன் தாயின் இறுதிச் சடங்கிற்குக் கூட வராத தனது தந்தை பிரகாஷ்ராஜையும், மூன்று அண்ணன்களையும்
தனது தாய் மறைந்த வீட்டிற்கு கண்டிப்பாக வரவழைப்பேன் என்ற சபதத்தில் வாழ்ந்து வருகிறார் கதாநாயகன் கார்த்தி.

ஆனால் பிரகாஷ் ராஜ், கார்த்தியை ஏமாற்றி சரண்யா பொன்வண்ணன் பெயரில் இருக்கும் சொத்தை அபகரிக்க நினைக்கிறார்.

சொத்தையும் பணத்தையும் பெரிதாக நினைக்கும் பிரகாஷ்ராஜ், தந்தை பெயரைத் தட்டாத மூன்று மகன்கள் கதாநாயகன் கார்த்தியின் பாசத்தைப் புரிந்து கொள்கிறார்களா கதாநாயகன் கார்த்தி தன் சபதத்தை நிறைவேற்றினாரா? இல்லையா? இறுதியில் கதாநாயகன் கார்த்தி தந்தை பிரகாஷ்ராஜை கொலை செய்தாரா? குடும்பத்தோடு இணைந்தாரா? கதாநாயகன் கார்த்தியை பிரகாஷ்ராஜ் ஏமாற்றி சொத்தை அபகரித்தாரா? காரணம் என்ன என்பதுதான் இந்த விருமன் திரைப்படத்தின் மீதிக்கதை.

இநத விருமன் திரைப்படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடித்துள்ளார்.

இந்த விருமன் திரைப்படத்தில் கதாநாயகன் கார்த்தி மிக ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தனது முதல் திரைப்படமான இயக்குனர் ஆமிர் இயக்கிய ‘பருத்தி வீரன்’ திரைப்படத்திலேயே கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில் கதாநாயகன் கார்த்தி முத்திரை பதித்தவர்.

நடனம், ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்திலும் கதாநாயகன் கார்த்தி ஸ்கோர் செய்திருக்கிறார்.

இந்த விருமன் திரைப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.

தனது அறிமுக திரைப்படமான விருமன் திரைப்படத்தில் கதாநாயகி அதிதி ஷங்கர் அழகு, சிரிப்பு, நடனம், ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பில் அசத்தி இருக்கிறார்.

முதல் திரைப்படத்தில் குத்தாட்டம் போட்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார் அதிதி ஷங்கர்.

முதல் திரைப்படம் என்று தெரியாத அளவுக்கு நடிப்பு மற்றும் நடனம் அனைத்திலும் தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கதாநாயகன் கார்த்தியின் தந்தையாக பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார்.

தாசில்தார் கதாபாத்திரத்தில் கம்பீரமாக நடித்திருக்கிறார் பிரகாஷ் ராஜ்.

அந்த கிராமத்தில் உள்ள பெரிய மனிதர் என்றால் வழக்கமான கதாபாத்திரம் போல இருந்து விடும் என அந்த ஊரில் உள்ள தாசில்தார் கதாபாத்திரத்தில் காண்பித்து இருக்கிறார்.

ஆனாலும், ஒரு கொடுமைக்கார தந்தை கண்முன் தெரியாமல் போவது பலவீனமாக உள்ளது.

கதாநாயகன் கார்த்தியின் தாய்மாமனாக ராஜ்கிரண் நடித்துள்ளார்.

கதாநாயகன் கார்த்தியின்
தாய்மாமனாக ராஜ்கிரணுக்கு முக்கியமான கதாபாத்திரம் என்றாலும் இவருக்கான காட்சிகள் குறைவுதான்.

அந்தக் கொஞ்சக் காட்சிகளிலும் தாய்மாமனின் பாசத்தால் கலங்க வைக்கிறார்.

பாசத்தால் ரசிகர்களை கட்டி போட்டு இருக்கிறார் ராஜ் கிரண்.

அவருடைய அனுபவ நடிப்பில் பல காட்சிகளில் கைத்தட்டல் வாங்கி இருக்கிறார்.

சூரி. பல இடங்களில் இவரது காமெடி திரைப்படத்திற்கு கைகொடுத்து இருக்கிறது.

ஏற்கனவே கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் கார்த்தியுடன் சூரி நடிப்பது கூட்டணி அருமை.

வில்லன் ஆர்.கே.சுரேஷ் காட்சியில் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

சரண்யா, வடிவுக்கரசி, மனோஜ் பாரதி, வசமித்ரா, ராஜ்குமார், அருந்ததி, இளவரசு என திரைப்படத்தில் பல கதாபாத்திரங்கள் அனைத்து அருமை.

அனைத்து கதாபாத்திரங்கள் இடமும் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர் முத்தையா.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் சூப்பர் ஹிட்.

குறிப்பாக மதுரை பாடல் தாளம் போட வைக்கிறது.

ஒளிப்பதிவாளர் எஸ்.கே. செல்வகுமாரின் ஒளிப்பதிவு மதுரை மணம் மாறாமல் படம் பிடித்து இருக்கிறது.

ரசிகர்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் முத்தையா.

வசனங்கள் அனைத்தும் திரைப்படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

மொத்தத்தில் விருமன் திரைப்படம் தாய் மீது பாசம் கொண்டவன்.