பின்னணி பாடகி எஸ்.ஜானகிக்கு எலும்பு முறிவு

பின்னணி பாடகி எஸ்.ஜானகிக்கு எலும்பு முறிவ

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, இந்தி, உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை, பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடி, லட்ச கணக்கான ரசிகர்களை தன்னுடைய இனிமையான குரலால் கவர்ந்தவர், பின்னணி பாடகி எஸ்.ஜானகி. இவர் சமீபத்தில் வெளியான ’96’ படத்தில் குட்டி ஜானுவாக நடித்த கௌரிக்கு குரல் கொடுத்திருந்தார். இந்நிலையில் குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்தபோது, கால் இடறி எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு எலும்பு முறிவிற்கு, அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இந்த செய்தி இசை ரசிகர்களை சோகத்தில் தள்ளியுள்ளது.