பிரபல நடிகரின் மகனுக்கு ஜோடியாகிறார் கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமா துறையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் இறுதியாக ‘சர்க்கார்’ படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ஐந்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள திரைப்படம் ஒன்றில் நாயகியாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக மோகன்லாலின் மகன் பிரணவ் நடிக்கும் இந்த படத்தை இளம் இயக்குனர் வினித் சீனிவாசன் இயக்குகிறார். இதனிடையே இவர்கள் மூவரும் சிறுவயது நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.