மீண்டும் தம்பதிக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்?

சென்னை 25 மே 2021

மீண்டும் தம்பதிக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்?

நடிகர் தளபதி விஜய்யுடன் ஏற்கனவே பைரவா, சர்கார் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், தற்போது மீண்டும் நடிகர் தளபதி விஜயுடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

தளபதி நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்துக்கு பிறகு நெல்சன் இயக்கும் ‘தளபதி 65’ திரைப்படத்தில் நடிக்கிறார்.

இதில் தளபதி நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே தளபதி 65 திரைப்படத்தில் நடிக்கிறார்.

இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்துள்ளது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று தீவிரம் குறைந்ததும் சென்னையில் அடுத்த கட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

இந்த திரைப்படத்துக்கு பிறகு தளபதி விஜய் நடிக்கும் 66-வது திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பல்லி இயக்க இருப்பதாகவும் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த திரைப்படம் தயாராக உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

இயக்குனர் வம்சி பைடி பல்லி ஏற்கனவே தமிழில் கார்த்தி நடித்த தோழா திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த மகிரிஷி, ராம்சரண் நடித்த எவடு, ஜூனியர் என்.டி.ஆர் நடித்த பிருந்தாவனம், பிரபாஸின் முன்னா ஆகிய திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உள்ளார்.

அவரது இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் 2 கதாநாயகிகளை கொண்ட கதை என்று கூறப்படுகிறது.

அதில் ஒரு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே தளபதி விஜய்யுடன் பைரவா, சர்கார் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!