சாணிக் காயிதம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக இயக்குநர் செல்வராகவன் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்.

தமிழ் திரைப்பட உலகில் தரமான திரைப்படங்களை கொடுத்த இயக்குனர்களில் ஒருவர்தான் இயக்குநர் செல்வராகவன்.

இவர் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்.

ஆனால் துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் அவருடைய தந்தை கஸ்தூரி ராஜாவின் பெயர் இயக்குனராக வரும்.

இவர் இயக்கிய திரைப்படங்கள்
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன?, என்ஜிகே உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த “என்.ஜி.கே” திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்த நிலையில் சற்றுமுன் இவரது அடுத்த திரைப்பட அறிவிப்பு சுதந்திர தின ஸ்பெஷலாக வெளிவந்துள்ளது.

இந்த திரைப்படத்தில் செல்வராகவனே கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவனுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த திரைப்படத்திற்கு சாணிக் காயிதம் என்று பெயரிட்டு இதன் பர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளனர்.

இந்த திரைப்படத்தை அருண் மாத்திஸ்வரன் இயக்குகிறார்.

ஸ்கீரின் ஸ்கீன் நிறுவனம் தயாரிக்கிறது.

error: Content is protected !!