பிரபல நடிகருக்கு எதிராக வியாபாரிகள் சங்கம் போராட்டம் ❗*
நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தற்போது விளம்பர படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் விரைவில் துவங்க இருக்கும் ஒரு இணைய விற்பனை நிறுவன விளம்பரத்திலும் நடித்துள்ளார். இது இணையத்தில் பலசரக்கு பொருளை விற்கும் நிறுவனம். இந்த விளம்பர படத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பதற்கு வியாபாரிகள் இடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வருகிற 4ம் தேதி காலை 10 மணிக்கு வளரசவாக்கத்தில் உள்ள விஜய்சேதுபதியின் அலுலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்த வியாபாரிகள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.











