மத்திய நிதி அமைச்சருடன் கோலிவுட் திரை உலக நிர்வாகிகள் சந்திப்பு*

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார், இசை கலைஞர்கள் சங்கத் தலைவர் தினா ஆகியோர் தங்கள் சங்க நிர்வாகிகளுடன் சந்தித்தனர்.

இந்த சந்திப்பில், திரைப்படங்களுக்கு விலங்கு நலவாரியத்திடமிருந்து தடையில்லா சான்று பெறுவதற்கு வசதியாக சென்னையில் விலங்கு நல வாரியத்தின் கிளை ஒன்றை அமைக்கவும், சினிமாவுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை குறைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இணைய வழி முன்பதிவை இந்தியா முழுவதும் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் எனவும் அவர்கள்வலியுறுத்தினார்.

error: Content is protected !!