பிரபல நகைச்சுவை நடிகருக்கு டாக்டர் பட்டம்

இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் இயக்கிய பொய்க்கால் குதிரை என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர் நடிகர் சார்லி.

நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர் நடிகர் சார்லி. இவர் சமீபத்தில் நடிகர் விவேக்குடன் இணைந்து ‘வெள்ளைப்பூக்கள்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் சார்லி ‘தமிழ் திரைப்படத்தில் நகைச்சுவை’ என்ற தலைப்பில் செய்த ஆய்வுக்காக அவருக்கு தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டத்தை அளித்துள்ளது.

இதனிடையே இதற்காக நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பாண்டியராஜன், பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் கோ. பாலசுப்பிரமணியன், பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழ் திரைப்பட வளர்ச்சிக்கு நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் அழகப்பா பல்கலைகழகத்தில் நடிகர் சார்லி எம்.பில் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

error: Content is protected !!