மலையாள திரைப்படத்தின் ரீமேக்கில் நடிகர் ஆர் கே சுரேஷ் நடிக்கும் விசித்திரன் திரைப்படம் இறுதிக்கட்ட பணிகள் துவங்கியுள்ளது.

சென்னை : 24 செப்டம்பர் 2020

இயக்குநர் பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ சார்பில் இந்த விசித்திரன் திரைப்படத்தை இயக்குநர் பாலா தயாரிக்கிறார்.

கடந்த 2018-ஆண்டு நவம்பர் மாதம் மலையாள திரைப்பட உலகில் வெளியாகி மிக பெரிய ஹிட்டான ஜோசப் என்கிற திரைப்படம்தான் தற்போது தமிழில் மொழி மற்றம் செய்து விசித்திரன் என்ற பெயரில் வெளி வர இருக்கிறது.

மலையாளத்தில் கதையின் கதாநாயகனாக குணச்சித்திர நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நடித்திருந்த கதாபாத்திரத்தில் தமிழ் திரைப்படத்தில் ஆர் கே சுரேஷ் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்திற்கு தற்போது விசித்திரன் என்று பெயர் வைத்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தில் ஆர்கே சுரேஷின் கதாநாயகனாக கதாநாயகியாக நடிகை பூர்ணா நடித்துள்ளார்.

மலையாளத்தில் இந்த ஜோசப் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பத்மகுமார்தான் தமிழிலும் விசித்திரன் திரைப்படத்தை இயக்குகிறார்.

இயக்குனர் பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க இயக்குனர் ஜான் மகேந்திரன் வசனம் எழுதியுள்ளார்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுவதற்கு முன்பே இந்த விசித்திரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், தற்போது இதன் இறுதிக்கட்ட பணிகள் துவங்கியுள்ளது