மான்ஸ்டர் – திரை விமர்சனம்
நடிப்பு – எஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி சங்கர், கருணாகரன்
தயாரிப்பு – பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ்
இயக்கம் – நெல்சன் வெங்கடேசன்
இசை – ஜஸ்டின் பிரபாகரன்
வெளியான தேதி – 17 மே 2019
ரேட்டிங் – 3.5/5
உலகில் எந்தவொரு உயிரை கொள்ள கூடாது என்பதை குறிக்கோளாக கொண்டு வாழ்ந்து வருபவர் எஸ்.ஜே சூர்யா அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும், எல்லா உயிர்களுக்கும், மனைவி, கணவன், குழந்தைகள் போல் அன்பு செலுத்த மனசு உள்ளது என்ற உயர்ந்த தத்துவத்தை சொல்லும் படம் கருணாகரனுடன் சேர்ந்து சென்னையில் வேலை செய்து வருகிறார்
தமிழ் சினிமாவில் நாய், யானை, குரங்கு, பாம்பு என பல மிருகங்கள் வைத்து எடுக்கப்பட்ட பல படங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், எலியை மையமாக வைத்து ஒரு படத்தை இந்த அளவிற்குப் பார்த்ததில்லை
அவர் திருமணம் செய்து கொள்ளப் போகும் பிரியா பவானி சங்கர் ஆசையாகக் கேட்டதால் வாங்கி வைத்த 5 லட்ச ரூபாய் சோபாவைக் கூட கடித்துக் குதறி விடுகிறது. அதனால், எலியைக் கொல்ல முடிவெடுக்கிறார் சூர்யா. அவர் அந்த எலியைக் கொன்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
எஸ்.ஜே.சூர்யாவுக்கென்றே உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் போலிருக்கிறது. ஒரு முதிர்கண்ணனாக அப்படியே அந்தக் கதாபாத்திரத்திற்குள் நுழைந்துவிட்டார். தனக்குத் திருமணம் நடந்துவிடாதா என்ற ஏக்கம், பிரியாவைப் பார்த்ததும் பொங்கி வரும், எலியின் சேட்டைகளைப் பார்த்து பொங்கி வரும் கோபம் என நடிப்பில் மான்ஸ்டர் ஆக மிரள வைக்கிறார்.
பிரியா பவானி சங்கருக்கு காதலிக்க வேலையில்லை. அப்படியே பாந்தமாய் வந்து சூர்யாவைப் பார்த்து காதல் பார்வை பார்த்துவிட்டுச் செல்கிறார். படத்தில் ஒரு அழகான நாயகி இருக்க வேண்டும் என்பதற்காகவே சேர்த்திருக்கிறார்கள் போலிருக்கிறது.
கருணாகரன்தான் காமெடிக்குப் பொறுப்பு. சின்னச் சின்ன ஒன் லைனர்களில் அசத்துகிறார். அதிலும், பால், டீத்தூள், சர்க்கரை வாங்கி வரும் காட்சியில் நம்மையும் மீறி சத்தமாகவே சிரிக்கத் தோன்றுகிறது. இவரை இன்னும் இயக்குனர்கள் சரியாகப் பயன்படுத்தவில்லை என்று மட்டும் தெரிகிறது.
சூர்யா, எலி, அந்த பிளாட் இதுதான் படத்தின் அதிக நேரத்தை ஆக்கிரமிக்கிறது. அதனால், மற்றவர்கள் கிடைத்த இடங்களில் அவர்கள் இருப்பை நிரூபிக்கிறார்கள். வில்லனாக அனில்குமார், பெரிய வேலையில்லை, இருந்தாலும் சமாளிக்கிறார்.
படத்தின் கலை இயக்குனருக்குத்தான் அதிக வேலை. அவரும் அந்த பிளாட்டுக்குள் காட்சிக்குத் தகுந்தபடி பொருட்களைக் கலைத்து போட்டு புகுந்து விளையாடியிருக்கிறார். ஒரு வீட்டிற்குள்ளேயே எப்படியெல்லாம் ஆங்கிள் வைக்க முடியும் என்பதை தன் ஒளிப்பதிவால் நிரூபித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பின்னணி இசையும் கூடவே பாடல்களும் படத்திற்கு கூடுதல் பலம்.
பரபரப்பை ஏற்படுத்துகிறது.
எஸ்.ஜே சூர்யா, ப்ரியா பவானி ஷங்கரின் நடிப்பு பிரமாதம். :
ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் நம்மை ரசிக்க வைத்த நெல்சன் வெங்கடேசன் இந்த படத்திலும் அதனை முயற்சி செய்துள்ளார். கோடை காலத்திற்கு குழந்தை குடும்பம் என அனைவரும் ஒன்று சேர்ந்து பார்த்து ரசிக்க கூடிய அளவில் கொடுத்துள்ளார்.
எலியைப் பார்ப்பதற்கு கிராபிக்ஸில் உருவாக்கிய எலி போலவே தெரியவில்லை. எங்கோ ஒரு சில காட்சிகளில் மட்டும்தான் தெரிகிறது. அதை உருவாக்கிய குழுவினரைத் தனியாகப் பாராட்ட வேண்டும்.
ஒரு வரிக்குள் சொல்லிவிடக் கூடிய கதையாக இருந்தாலும் அதை முடிந்தவரை சுவாரசியமாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர். இடைவேளைக்குப் பின் திரைக்கதை வீட்டுக்குள்ளேயே சுற்றிச்சுற்றி வருகிறது. அதனால் கொஞ்சம் நாடகத்தனமாக நகர்கிறது.
வழக்கமான கதைகளைப் பார்த்து போரடித்துள்ள ரசிகர்களுக்கு ‘மான்ஸ்டர்’ கொஞ்சம் மாறுதலாக இருக்கும்.
மான்ஸ்டர் – அனைவரும் குடும்பத்துடன் பார்க்கலாம்