டான் திரை விமர்சனம் ரேட்டிங் :- 4.25 / 5.

நடிகர் நடிகைகள் :- சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், ஆர்.ஜெ.விஜய், சிவாங்கி, ஆதிரா, ராஜு, ஷாரிக், காளி வெங்கட், முனிஸ்காந்த, மரியான் ஜார்ஜ், மற்றும் பலர்.

இயக்கம் :- சிபி சக்கரவர்த்தி.

ஒளிப்பதிவு :- கே.எம். பாஸ்கரன்.

படத்தொகுப்பு :- நாகூரன்.

இசை :- அனிருத்.

தயாரிப்பு :- லைக்கா புரொடக்ஷன்ஸ்,. சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்.

ரேட்டிங் :- 4.25 / 5.

 

தமிழ் திரைப்பட உலகில் ஒரு கலகலப்பான கல்லூரிக் கதையைப் பார்த்து பல காலமாகி விட்டது.

அப்படியாப்பட்ட ஒரு குறையை இந்த டான் திரைப்படம் போக்கி உள்ளது.

புதுமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த காலத்தில் உள்ள இளம் ரசிகர்கள் கல்லூரி மாணவர்கள் எந்த மாதிரியான திரைப்படத்தை கொடுத்தால் ரசிப்பார்கள் என்பது நன்றாகவே புரிந்திருக்கிறார்.

அதற்கேற்றவாறு கதை மற்றும் திரைக்கதை காட்சிகள், வசனங்கள் என திரைப்படத்தில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து வெற்றியும் பெற்று விட்டார்கள்.

ஒரு கலகலப்பான கல்லூரி கதையை திரைப்படமாக எடுக்க வேண்டும் என முடிவெடுத்த பின் கதையைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கலகலப்பாக நகர்த்தி கடைசியில் காட்சிகளில் எமோஷனல் காட்சிகளை உணர்ச்சிக வசப்பட்டு கண்கலங்க வைத்து விட்டார்கள்.

கிராமத்தில் வாழும் சமுத்திரக்கனி, தனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று அதனால் கனவுடன் இருக்கிறார்.

ஆனால், அவருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது.

சாதாரண குடும்பத்தில் கதாநாயகன் சிவகார்த்திகேயன் சமுத்திரக்கனிக்கு மகனாக பிறக்கிறார்.

கதாநாயகன் சிவகார்த்திகேயன் சிறு வயதிலிருந்தே கண்டிப்பாக வழக்கக் கூடிய தந்தை சமுத்திரக்கனி.

தந்தை சமுத்திரக்கனி
தான் படும் கஷ்டம் தனது மகனுக்கு வர கூடாது என நினைத்து கதாநாயகன் சிவகார்த்திகேயனை
இஞ்சினியரிங் கல்லூரியில் படிக்க சேர்த்துவிடுகிறார் தந்தை சமுத்திரக்கனி.

தனது மகன் கதாநாயகன் சிவகார்த்திகேயனை படித்து
மிக பெரிய இஞ்சினியராக வேண்டும் என நினைக்கிறார் தந்தை சமுத்திரக்கனி.

ஆனால் கதாநாயகன் சிவகார்த்திகேயனோ படிக்காமல் பெரிய ஆளாக வேண்டும் என நினைக்கிறார்.

அந்த கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவிற்கும் கதாநாயகன் சிவகார்த்திகேயனுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது.

கதாநாயகன் சிவகார்த்திகேயனை இன்ஜினியரிங் டிகிரி வாங்க விடாமல் தடுக்கிறார்.

இறுதியில் எஸ்.ஜே.சூர்யாவின் தடைகளை தாண்டி, கதாநாயகன் சிவகார்த்திகேயன் இன்ஜினியரிங் முடித்தாரா? இல்லையா?

கதாநாயகன் சிவகார்த்திகேயன் தனக்குப் பிடித்த ஒன்றை செய்யும் முயற்சியில் இறங்குகிறார்.

அதில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதுதான் இந்த டான் திரைபபடத்தின் மீதிக் கதை.

இநத டான் திரைப்படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.

கதாநாயகன் சிவகார்த்திகேயன் துறுதுறு நடிப்பால் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

கதாநாயகன் சிவகார்த்திகேயன் நடிப்பு நடனம், காமெடி சென்டிமென்ட், காதல் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

சொல்ல வேண்டுமென்றால் நடனம் மற்றும் பள்ளி பருவ காட்சிகளில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.

தற்போது கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் பிரதிபலிப்பாக ஜொலித்து இருக்கிறார் கதாநாயகன் சிவகார்த்திகேயன்.

இறுதியில் காட்சிகளில் கண்கலங்க வைத்திருக்கிறார் கதாநாயகன் சிவகார்த்திகேயன்.

தந்தையின் கண்டிப்புக்கு பயந்தவராக கொஞ்சம் அதிகமாகவே ஸ்கோர் செய்துள்ளார் கதாநாயகன் சிவகார்த்திகேயன்.

தனக்குப் பிடித்ததைக் கண்டுபிடித்து அதில் ஜெயிக்க வேண்டும் என நினைக்கும் சக்கரவர்த்தி கதாபாத்திரத்தில் சர்வ சாதாரணமாய் நடித்துள்ளார் கதாநாயகன் சிவகார்த்திகேயன்.

கதாநாயகியாக நடித்திருக்கும் பிரியங்கா அருள்மோகன் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கதாநாயகன் சிவகார்த்திகேயன் கதாநாயகி பிரியங்கா அருள்மோகன் இருவரின் கெமிஸ்ட்ரி டாக்டர் திரைப்படத்திற்கு பிறகு சிறப்பாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது.

கதாநாயகன் சிவகார்த்திகேயன் கதாநாயகி பிரியங்கா அருள்மோகன். இருவருக்கும் இடையில் கல்லூரியில் அதிகமான காதல் கதை இல்லை.

ஆனால், பிளாஷ்பேக்கில் பள்ளியில் நடக்கும் அந்தக் காதல்தான் மிக அருமையாக ரசிக்க வைக்கிறது.

பள்ளி மாணவியாகவும், கல்லூரி மாணவியாகவும் பிரியங்கா அருள் மோகன் அவ்வளவு பொருத்தமாக இருக்கிறார்.

திரைப்படத்திற்கு மிகபெரிய பலம் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு.

கல்லூரியின் பிரின்சிபாலாக இல்லை என்றாலும் கல்லூரியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பேராசிரியராக எஸ் ஜே சூர்யா.

பல இடங்களில் சாதாரணமாக நடித்து கைத்தட்டல் வாங்கி இருக்கிறார்.

கண்டிப்பான தந்தையாக மனதில் பதிந்திருக்கிறார் சமுத்திரக்கனி.

சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்திருக்கும் ஆதிரா பாண்டிலட்சுமி அந்த ஒரே ஒரு காட்சியில் மனதில் நின்றுவிடுகிறார்.

ராதாரவி, முனிஸ்காந்த், காளி வெங்கட், பாலா, சிவாங்கி, ஆர்ஜே.விஜய் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.

முக்கியத்துவம் இல்லாமல் வந்து போகும் ஒரு கதாபாத்திரத்தில் சூரி.

அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.

பின்னணி இசை சிறப்பு.

அதனால் படத்தில் எப்போதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது.

எல்லாவற்றையும் சமாளித்து ஒளிப்பதிவு செய்துள்ளார் பாஸ்கரன்.

பாஸ்கரனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.

மாணவர்களின் கல்லூரி படிப்பு, தந்தை மகன் பாசம், இளம் இயக்குனர்களின் உணர்வை திரைப்படமாக இயக்கி இருக்கிறார் புதுமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி.

புதுமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி
கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.

முதல் திரைப்பட இயக்குனர் என்று சொல்ல முடியாத அளவிற்கு திரைப்படத்தை கொடுத்து இருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் உணர்வுபூர்வமாக இயக்கி இருக்கிறார்.

கிளைமாக்சில் பலரும் கண் கலங்க வைக்கும்படியான காட்சி உண்டு.

மொத்தத்தில் ‘டான்’ திரைப்படம் மிகவும் அருமை.