Sunday, August 1
Shadow

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணமும்..

பழம்பெரும் நட்சத்திர தம்பதியர் விஜயகுமார் – மஞ்சுளாவின் மகள் நடிகை வனிதா நேற்று பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு திருமணம் ஆகி ஒரு நாள் மட்டுமே ஆகும் நிலையில், பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் என்பவர் தன்னுடைய கணவர் பீட்டர் பாலை மீட்டுத்தருமாறு நடிகை வனிதா மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

நடிகை வனிதாவிற்க்கு ஏற்கனவே இரண்டு திருமணம் மற்றும் ஒரு காதல் தோல்வியை சந்தித்த நடிகை வனிதா தன்னுடைய பெற்றோர் மற்றும் சகோதர சகோதரிகளுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, தனது இரு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.

நடிகை வனிதா பீட்டர் பாலுக்கும் நேற்றுதான் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றது.

நடிகை வனிதா – பீட்டர் பால் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது அவர்களுக்கு திரையுலகினர் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்த நிலையில் முறையாக என்னிடம் விவாகரத்து பெறமால் பீட்டர் பால் நடிகை வனிதாவை எப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்று அவருடைய முதல் மனைவி எலிசபெத்த ஹெலன் வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

என்னிடம் முறையாக விவாகரத்து பெற்ற பிறகே நடிகை வனிதாவை திருமணம் செய்து கொள்வேன் என பீட்டர் பால் ஏற்கனவே கூறியதாகவும்,

அவர் அதை பின்பற்றாமல் நடிகை வனிதாவை நேற்று திருமணம் செய்து கொண்டதாகவும் எலிசபெத் ஹெலன் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

பீட்டார் பால் – எலிசபெத் ஹெலன் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் வனிதாவை பீட்டர் பால் திருமணம் செய்துள்ளார்.

நடிகை வனிதா – பீட்டர் பால் திருமணம் நடைபெற்ற அடுத்த நாளே புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது திரைப்பட வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.