கொரோனா தேவி சிலையின் முகம் நடிகை வனிதா விஜயகுமார் போல் உள்ளது என ஒப்பிட்ட நெட்டிசன்கள்
சென்னை 22 மே 2021
கொரோனா தேவி சிலையின் முகம் நடிகை வனிதா விஜயகுமார் போல் உள்ளது என ஒப்பிட்ட நெட்டிசன்கள்.
சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கொரோனா வைரஸ் தேவி சிலை, பார்ப்பதற்கு நடிகை வனிதா விஜயகுமார் போலவே இருப்பதாக நெட்டிசன்கள்
கிண்டல் செய்து வருகிறார்கள்.
கொரோனா வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசும் மாநில அரசும் எடுத்து வருகிறது.
இந்த நிலையில் கோவையில் உள்ளவர்கள் ஒருபடி மேலே சென்று கொரோனா தேவி சிலை வைத்து மக்கள் விரைவில் கொரோனாவில் இருந்து விடுபட வேண்டும் என வேண்டுதலோடு வழிபட்டு வருகின்றனர்.
இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சில நெட்டிசன்கள் கொரோனா தேவி சிலை, பார்ப்பதற்கு நடிகை வனிதா விஜயகுமார் போலவே இருப்பதாக ஜாலியாக கேலி கிண்டல் செய்து, அதுகுறித்த மீம்ஸ்களை அவருக்கே டேக் செய்து வருகின்றனர்.
இந்த புகைப்படத்தை பார்த்த நடிகை வனிதா விஜயகுமார், கடுப்பாகி, “எல்லோரும் இதை ஏன் எனக்கு ஷேர் செய்கிறார்கள்? என்று பதிவு செய்து கேள்வி எழுப்பியுள்ளார்”.
இந்த பதிவு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.











