மீண்டும் டாப்சியுடன் இணைந்த தனுஷ்

ஆடுகளம் படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷ் மற்றும் நடிகை டாப்சியும் கேம் ஓவர் படத்தின் மூலம் இருவரும் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள்.

மாயா’, `இறவாக்காலம்’ படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் அடுத்ததாக டாப்சியை வைத்து `கேம் ஓவர்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், ஜூன் 14-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இப்படத்தின் டிரைலரை நடிகர் தனுஷ், நாளை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தில் டாப்சி வித்தியாசமான கேம்களைத் தயாரிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வினோதினி வைதிநாதன், அனிஷ் குருவில்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரான் ஈதன் யோஹன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு ஏ.வசந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரிச்சர்ட் கேவின் படத்தொகுப்பை கவனிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ளது.

தனுஷும், டாப்சியும் இணைந்த நடித்த ‘ஆடுகளம்’ திரைப்படத்திற்குப் பிறகு கேம் ஓவர் படத்தின் டிரைலரை வெளியிடுவதன் மூலம் இருவரும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்