மீண்டும் தமிழ் சினிமாவில் பிஸியாகும் உலகநாயகன்
கடந்த மே மாதம் வரை சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பணிகளில் பிசியாக இருந்தார் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன்.
அதன்பின்னர் சினிமாவில் பிசியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியை பிஸியாக தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.
கமல்ஹாசன் இயக்கி நடித்த ‘சபாஷ் நாயுடு’ படம் என்ன ஆச்சு? என்பதே யாருக்கும் தெரியாத நிலையுள்ளது.
இந்த நிலையில் விரைவில் ‘இந்தியன் 2′ மற்றும் ‘தலைவன் இருக்கின்றான்’ ஆகிய படங்களில் தொடர்ந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இதற்காகத்தான் இது நாள் வரை முறுக்கு மீசையுடன் வலம் வந்த கமல் முற்றிலும் ஷேவ் செய்த முகத்துடன் வந்துள்ளார்.
எனவே விரைவில் இந்தியன் 2 சூட்டிங் தொடங்கினாலும் இடையில் இடையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியிலும் கமல் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.