முருங்கைக்காய் புகழ் கே பாக்யராஜ் மகன் சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் “முருங்கைக்காய் சிப்ஸ்”

ஸ்ரீஜர் இயக்கத்தில் நடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிக்க உள்ள “முருங்கைக்காய் சிப்ஸ்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிரமணியன், சரவண பிரியன் தயாரிப்பில், இயக்குநர் ஸ்ரீஜர் இயக்கும் புதிய திரைப்படத்திற்கு “முருங்கைக்காய் சிப்ஸ்” என பெயரிட்டுள்ளனர்.

இதில் திரைப்படத்தில் கதாநாயகனாக சாந்தனு பாக்யராஜ் அவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்க உள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் கே.பாக்யராஜ் மனோபாலா ஆனந்த்ராஜ் மயில்சாமி மொட்ட ராஜேந்திரன் யோகி பாபு ரேஷ்மா மதுமிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகவிருக்கும் இந்த திரைப்படம் புதுமணத் தம்பதிகளின் முதல் இரவில் நடைபெறும் முக்கிய பாரம்பரிய நிகழ்வுகளையும், சாங்கித்யங்களையும் நகைச்சுவை மாறாமல் சற்றும் விரசம் இல்லாமல் சுவராஸ்யமாக காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளனர்.

https://twitter.com/AthulyaOfficial/status/1280748305488572416?s=19