மூன்றாவது முறையாக பிரபல இயக்குனருடன் கைகோர்கிறார் நடிகர் சூர்யா .!

இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில், நடிகர் சூர்யா ‘சூரரைப்போற்று’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. முன்னதாக கவுதம் மேனன் இயக்கத்தில், ‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’ ஆகிய படங்களில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.