வணங்கான் திரைப்படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகினார் – அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.!

சென்னை 05 டிசம்பர் 2022 வணங்கான் திரைப்படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகினார் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.!

சமீபத்தில் சூரரை போற்று திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் சூர்யா வென்றார்.

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் பெயரிடப்படாத திரைப்படம் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படப்பிடிப்பில் பங்கேற்று பிஸியாக இருந்து வருகிறார்.

சமீபத்திய அதிர்ச்சி செய்தி என்னவென்றால். நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் பாலா ரசிகர்களுக்கு ஏமாற்றம் செய்தி வெளியாகியுள்ளது.

பிரபல இயக்குனர் பாலா இயக்கி வரும் வணங்கான் திரைப்படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளார்.

ஸ்கிரிப்ட்டில் ஏற்பட்ட மாற்றங்களால் நடிகர் சூர்யா பின்வாங்கினார் என்று இயக்குனர் பாலா ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டார்.