மூன்றாவது முறையாக இணையும் கெளதம் வாசுதேவ் மேனன்- சிலம்பரசன் டிஆர் இசை புயல் ஏ ஆர் ரஹ்மான் இணையும் வெற்றி கூட்டணி.
சென்னை 07 ஆகஸ்ட் 2021 மூன்றாவது முறையாக இணையும் கெளதம் வாசுதேவ் மேனன்- சிலம்பரசன் டிஆர் இசை புயல் ஏ ஆர் ரஹ்மான் இணையும் வெற்றி கூட்டணி.
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன்’ திரைப்படத்தில் நடித்தார்.
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் ‘மாநாடு’ ஆகிய திரைப்படங்களை முடித்து விட்டு உடனடியாக அடுத்த திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
இந்தத் திரைப்படம் நடிகர் சிலம்பரசன் டிஆருக்கு 47-வது திரைப்படமாகும்.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் திரைப்படங்கள் என்றாலே தலைப்பு மிகவும் வித்தியாசமாகத்தான் இருக்கும்.
என்பது தமிழ்த் திரைப்பட உலகில் உள்ள ரசிகர்கள் அறிந்ததுதான்.
இந்த நிலையில் இந்தப் புதிய தலைப்பும் இது கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படம்தான் என்பதை சொல்ல வைத்திருக்கிறது.
இந்த திரைப்படத்தின் மூலமாக சிலம்பரசன் டிஆரும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனும் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார்கள்.
நடிகர் சிலம்பரசன் டிஆர் ஏற்கெனவே இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இவர்களது கூட்டணி எப்போது இணையும் என சிலம்பரசன் டிஆரின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், சுமார் ஐந்து வருடங்களுக்கு பின்னர் மீண்டும், இருவரும் இந்த திரைப்படத்தில்தான் இணைந்துள்ளனர்.
வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இந்தப் திரைப்படத்தைத் தயாரிக்கிறார்.
இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே சிலம்பரசன் டிஆர் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியாக்கியிருக்கிறது.
சின்ன பையன் தோற்றத்தில் உள்ள
சிலம்பரசன் டிஆர் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் அழுக்கு சட்டை, கைலி கட்டியபடி கையில் ஒரு சொரட்டு கோல் வைத்துள்ளார்.
மேலும் அவர் நிற்கும் இடத்தில் நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது.
இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இதுவரை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய திரைப்படங்களில் இருந்து இந்த கதை மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்பதை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலமாகத் தெரிகிறது.
இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தில் நடிக்கவிருந்தார்.
இந்த திரைப்படத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்க இருந்தார்.
சிலம்பரசன் டி ஆர் நடிக்கவிருந்த நதிகளிலே நீராடும் சூரியன்’ தலைப்பை மாற்றி தற்போது வெந்து தணிந்தது காடு’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் அறிவித்தபடி ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற படத்தலைப்பை மாற்றியுள்ளனர்.
தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.