*’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்தில் இணைந்த நகைச்சுவை பிரபலம்*
இயக்குநர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில், விஜய் சேதுபதியின் 33வது படமான ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் நடிகர் விவேக்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் படக்குழு தெரிவித்துள்ளது.











