யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3.25./ 5.
நடிகர் & நடிகைகள் :- விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், தபியா மதுரா, கனிஹா, மகிழ் திருமேனி, கரு.பழனியப்பன், மோகன் ராஜா, விவேக், ரித்விகா, ஸ்ரீ ரஞ்சனி, ரகு ஆதித்யா, இமான் அண்ணாச்சி, பாவா செல்லதுரை, ராஜேஷ், சின்னி ஜெயந்த், வித்யா பிரதீப், அஜய் ரத்னம், சம்பத் ராம், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- வெங்கடகிருஷ்ண ரோகந்த்.
ஒளிப்பதிவு :- வெற்றிவேல் மகேந்திரன்.
படத்தொகுப்பு :- ஜான் ஆபிரகாம்.
இசை :- நிவாஸ் கே பிரசன்னா.
தயாரிப்பு நிறுவனம் :- சந்திரா ஆர்ட்ஸ்.
தயாரிப்பாளர் :- எஸ்.எசக்கி துரை.
ரேட்டிங் :- 3.25./ 5.
இலங்கையில் நடைபெற்ற பேரினால் தன் தாய் தந்தை மற்றும் உறவினர்களை இழந்து அனாதையாக சுற்றி திரியும் சிறுவன் ஒருவனை போரில் அடிபட்டு இறந்து போகும் ஒரு இஸ்லாமிய பெண் பாதிரியார் ராஜேஷிடம் காண்பித்து அவனைக் காப்பாற்றும் படி கூற கதாநாயகன் விஜய் சேதுபதியை ராஜேஷ் தன்னுடன் அழைத்து செல்கிறார்.
இலங்கையில் நடைபெற்ற கோர சம்பவமான போரில் நடந்த அனைத்தும் மனதில் ஆழமாக பதிந்துப் போன பேரின் பெரும் சத்தம், அவனை தொந்தரவு செய்கிறது.
இதை அறியும் பாதிரியார் ராஜேஷ் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு இசை பயில்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கிறார்.
இசையில் வல்லவனாக வரும் கதாநாயகன் விஜய் சேதுபதி சிங்கள ராணுவ தாக்குதலில் தப்பி அகதியாக நாடற்றவனாகவும், அடையாளமற்றவனாகவும்
இந்தியா வருகிறார்.
அதன்பின்னர் கேரளாவில் உள்ள இசைக்கருவிகள் விற்பனை செய்யும் கடையில் வேலைக்கு சேர்கிறார்.
ஒரு கட்டத்தில் அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லாமல் தமிழகத்தில் உள்ள பழணி முருகன் கோவிலுக்கு வரும்போது அவரை காவல்துறையினர் கைது செய்கிறது.
காவல்துறை சிறையில் இருக்கும் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு இன்னொரு இலங்கை தமிழரான கரு. பழனியப்பன், கிருபாநிதி என்ற பெயரையும் அதற்குரிய ஆவணங்களையும் கொடுத்து அந்த பெயரில் அகதி முகாமில் தங்க அரசுக்கு விண்ணப்பிக்கும் படி கூறுகிறார்.
இதுவே கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு கிருபாநிதி என்ற பெயர் அவருக்கு ஆபத்தாக அமைகிறது.
காவல்துறை அதிகாரியான மகிழ் திருமேனி கதாநாயகன் விஜய் சேதுபதியை தீர்த்து கட்ட தேடி அலைகிறார்.
அது ஒரு புறம் இருக்க ஒரு தலையாக கதாநாயகன் விஜய் சேதுபதியை காதலிக்கும் கதாநாயகி மேகா ஆகாஷ்
லண்டன் இசைப்போட்டியில் பங்கேற்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
இறுதியில் கிருபாநிதி யார்? எதற்காக மகிழ் திருமேனி கதாநாயகன் விஜய்சேதுபதியை கொலை செய்ய துடிக்கிறார்? லண்டன் இசை பள்ளி போட்டியில் பங்கேற்க நினைக்கும் கதாநாயகன் விஜய் சேதுபதியின் ஆசை நிறைவேறியதா? நிறைவேறவில்லையா? என்பதுதான் இந்த யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார்.
கதாநாயகன் விஜய்சேதுபதி இலங்கை அகதியாக மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் மிக அருமையாகவும் நடித்திருக்கிறார்.
இதனை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுக்களை பெறுகிறார்.
அன்பான பேச்சு, சாந்தமான முகம், சத்தங்களை கேட்டு நிலை குலைதல், தனக்குரிய அடையாளம் தேடி அலைதல் என்று கதாநாயகன் விஜய் சேதுபதி நடிப்பில் பல மாதிரியான வித்யாசங்கள் காட்டி ரசிகர்கள் மத்தியில் கைத்தட்டல் பெறுகிறார்.
லண்டன் இசை பள்ளி அரங்கில் அகதிகளின் துயரங்களை வெளிப்படுத்தும் இடங்களில் கல் நெஞ்சம் படைத்தவர்களை கூட கண்கலங்க வைத்துவிட்டார்.
இந்த யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தின் கதாநாயகியாக மெகா ஆகாஷ் வைத்துள்ளார்.
கதாநாயகி மேகா ஆகாஷ் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார்.
காவல்துறை அதிகாரியாக வரும் மகிழ் திருமேனி, கதாநாயகன் விஜய் சேதுபதியை கொல்ல வெறித்தனம் காட்டும் இடங்களில் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.
சிறிய கதாபாத்திரத்தில் சிறிது நேரம் வந்தாலும் சின்னி ஜெயந்த் கவனிக்க வைக்கிறார்.
மறைந்த அமரர் நடிகர் விவேக் குணசித்திர நடிப்பால் கவனம் பெறுகிறார்.
தம்பி சேகர் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ரகுஆதித்யா கொடுத்த வேலையை சிறப்பாக செய்து கவனத்தை பெற்றிருக்கிறார்.
இயக்குநர் மோகன்ராஜா, கரு.பழனியப்பன், ராஜேஷ், கனிகா, தபியா மதுரா, ரித்விகா, இமான் அண்ணாச்சி, அஜய்ரத்னம், சம்பத்ராம் உள்ளிட்ட அனைவரும் நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் வெற்றி வேல் மகேந்திரனின் ஒளிப்பதிவு காட்சிகளின் மூலம் யுத்த களம், கடல், காடுகள், நகரம் என்று பல இடங்களில் . கதைக்களத்திற்கு நம்மை அழைத்து செல்கிறார்.
ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவும் கவனிக்க வைக்கிறது.
குறிப்பாக இலங்கையில் நடந்த போர் காட்சிகள் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.
இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவின் இசை மற்றும் பாடல் பின்னணி இசை திரைப்படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசை சார்ந்த திரைப்படம் என்பதால் அதிகம் உழைத்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் தொடக்கத்திலிருந்து முடிவு வரை அவரின் இசையே திரைப்படத்தை தாங்கிப் பிடிக்கிறது.
இலங்கை தமிழ் அகதிகளின் வாழ்வியலையும் போராட்ட வலிகளையும் கதை திரைக்கதையில் கொண்டு வந்து பாராட்டுக்களை பெறுகிறார் இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த்.
தமிழகத்தில் இலங்கை அகதிகளின் நிலை என்னவாக உள்ளது என்பதை அடிப்படையாக வைத்து திரைக்கதையை எழுதியுள்ளார் இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த்.
மொத்தத்தில் யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படம் மிகச்சிறந்த படைப்பு.