விஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம்’ படத்தின் முக்கிய தகவல்
இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் ‘லாபம்’. விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் சுருதி ஹாசன் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ராஜபாளையத்தில் துவங்கி குற்றாலம், தென்காசி பகுதிகளில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.