ஸ்பெயின் முன்னாள் கால்பந்து வீரர் விபத்தில் மரணம்

ஸ்பெயின் கால்பந்து அணியின் முன்னாள் முன்கள வீரரான ஜோஸ் அன்டோனியா ரியாஸ் (வயது 35) ஸ்பெயின் நாட்டில் நேற்று நடந்த கார் விபத்தில் மரணம் அடைந்தார். ஸ்பெயின் அணிக்காக 21 சர்வதேச போட்டியில் விளையாடி இருக்கும் ஜோஸ் அன்டோனியா ரியாஸ் 2006–ம் ஆண்டுக்கான உலக கோப்பை போட்டிக்கான அணியிலும் அங்கம் வகித்தார். ஆர்செனல் உள்பட முன்னணி கிளப் அணிகளுக்காக விளையாடி இருக்கும் அவர் கடந்த ஜனவரி மாதத்தில் ஸ்பெயினில் உள்ள 2–வது டிவிசன் போட்டியில் விளையாட ஒப்பந்தம் ஆனார். ஜோஸ் அன்டோனியா ரியாஸ் மறைவால் ஸ்பெயின் கால்பந்து ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறார்கள்